ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ் கனடாவில் எழுதி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு அரிய வாய்ப்பு இதோ. படத்தின் கதாநாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆட்கள் தேவை.
கனடாவில் வசித்தபடி நடிக்க ஆர்வத்துடன் காத்திருப்பவர்கள் எம்மைத் தொடர்புகொள்ளுங்கள். ஜெய் ஆகாஷின் படத்தில் நடிக்கலாம். கனடாவில் படப்பிடிப்பு இடம்பெறும் இந்தப் படம் கனடா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் திரையிடப்படவுள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஈழத்து மண்ணின் மைந்தன், தாவடி மைந்தன் ஜெய் ஆகாஷ் நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்துவைத்தார்.
அத்துடன் ரோஜாக் கூட்டம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செவ்வேள், இயக்குனர் அகத்தியன் இயக்கிய ராமகிருஷ்ணா, இயக்குனர் எழில் இயக்கிய அமுதே, காற்றுள்ளவரை போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.
தமிழில் மட்டுமல்லாது, கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் சி-தமிழ் தொலைக்காட்சியில் நீதானே எந்தன் பொன்வசந்தம், நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற தொடர்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதுகளை வென்றவர்.
அவரின் திரைப்படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை
