மலேசியாவில் நடைபெற்ற 21ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் பூண்டுலோயாவை சேர்ந்த துரைசாமி விஜிந்த் என்பவர் தேர்வாகியுள்ளார்.
நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய போட்டிகளில் தேர்வுசெய்யப்பட்டு அடுத்த ஆண்டு கனடா டொரொண்டோ நகரில் நடைபெற இருக்கும் உலக மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்று மலையகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இ.தொ.கா இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமானின் பரிந்துரையின் பெயரில் “மலையக சிறகுகள் ” அமைப்பு, துரைசாமி விஜிந்துக்குக்கு அவரின் மலேசியா பயணத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து பக்கபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

