கனடாவின் Toronto நகரில் தமிழர் தெருவிழா இன்று சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கின்றது. தமிழர் தெருவிழா 2017இனை Toronto மேயர் John Tory உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.
கனடா பிரதமர் Justin Trudo தமிழர் தெருவிழாவிற்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு வருகை தந்து உரை ஆற்றவிருக்கிறார். புலம்பெயர் தமிழ் மக்களின் நிகழ்வு ஒன்றிற்கு பிரதமராகப் பதவியிலிருக்கும் ஒருவர் வருகை தருவது இதுவே முதன் முறையாகும். கனடாவின் மத்திய, மாநில, உள்ளுராட்சி அரசு நிலைத் தலைவர்களும், வேறுபல உயர்நிலை அரசியல்வாதிகளும் தெருவிழாவினை பார்வையிட வருகை தரவுள்ளார்கள்.
தாயகத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா, கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோரும் வருகை தரவுள்ளார்கள்.