Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் காட்டுப்பாதை இன்று திறக்கப்படுகிறது

July 4, 2018
in News, Politics, World
0

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும்

பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து மூடும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இன்று 4ஆம் திகதி புதன்கிழமை காலை 6மணிக்குத் திறக்கப்படும். ஆனால் மீண்டும் அது யூலை 22ஆம் திகதி மூடப்படும்.

முன்னர் மீண்டும் மூடப்படும் திகதி 24ஆம் திகதி எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. எனினும் இறுதி 4நாட்களுள் பயணித்து 28ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொள்ளமுடியாதுபோகும் என்பதால் குறைந்தது 6நாட்கள் பயணிப்பதற்கு வசதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .

இந்தத்தீர்மானம் அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையிலான

மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் தொடர்பிலான இறுதிக்கூட்டம் திங்கட்கிழமை பகல் உகந்தை முருகன் ஆலய வளாகத்திலுள்ள காரைதீவு மடத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் யூலை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 28ஆம் திகதி

தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

அக்காலப்பகுதியில் காட்டுப்பாதையால் பயணிப்போர் பொலித்தீன்பாவனையை முற்றாகத் தடைசெய்யவேண்டும். அன்னதானம் வழங்குவோர் பார்சலில் வழங்கமுடியாது. மாறாக ஆலய அனுமதியுடன் பீங்கானில் வழங்கவேண்டும்.

ஆலயத்திற்கு வரும் அடியார்கள் பாதயாத்திரீகர்கள் அனைவருக்குமாக 31

தண்ணீர்த்தாங்கிகள் வைக்கப்படவேண்டும்.இராணுவம் விசேடஅதிரடிப்படை இதற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆலையடிவேம்பு மற்றும் லாகுகல பிரதேசசபைகள் தண்ணீர்பவுசர்களை வழங்கும். அம்பாறைக்கச்சேரியும் ஒரு வவுசரை வழங்கும்.

விசேடஅதிரடிப்படை இராணுவம் தண்ணீரை நிரப்பிவைக்கும்.

காட்டுப்பாதையால் செல்லும் யாத்திரீகர்களுக்கான பாதுகாப்பை பொலிஸ்

வனஜீவராசிகள் திணைக்ககளம் இராணுவம் என்பன இணைந்துவழங்கும்.

உகந்தயையடுத்துள்ள குமண பறவைகள் சரணாலய முன்றலில் யாத்திரீகர்கள் கணக்கெடுப்பொன்றுக்கு உள்ளாக்கப்படுவார்கள். கடந்தாண்டு 25ஆயிரம் பாதயாத்திரீகர்கள் பயணித்துள்ளனர். இவ்வாண்டும் அதேஅளவான தொகை எதிர்பார்க்கப்படுகின்றது.

இராணுவமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இக்கணக்கெடுப்பை எவ்வித கெடுபிடியுமின்றி நடாத்துவர். ஆலயவளாகத்தில் மின்சார வசதி சுகாதாரவசதி யாத்திரீகர்களுக்கு நிறைவாக ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மலசலகூடவசதியும் சுத்தமாகவழங்கப்படும்.போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Previous Post

கல்முனையில் தனிமையில் செல்லும் பெண்களிடம் நடந்தேறும் மோசமான சம்பவங்கள் !

Next Post

“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?”

Next Post

"ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures