கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு ‘திரிபங்கி லலிதாகரன்’ என்ற பெயரும் உண்டு. கண்ணனின் நாமங்களை அறிந்து கொள்ளலாம்.
* ஹரி – இயற்கையின் அதிபதி
* கேசவன் – அளவிட முடியாதவன்
* ஸ்ரீதரன் – லட்சுமியை மார்பில் கொண்டவன்
* வாசுதேவன் – உயிர்கள் அனைத்திலும் வசிப்பவன்
* விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்
* மாதவன் – பெரும் தவம் செய்பவன்
* மதுசூதனன் – மது என்னும் அசுரனைக் கொன்றவன்
* புண்டரீகாட்சன் – தாமரை போன்ற கண்களை உடையவன்
* ஜனார்த்தனன் – தீயவர்களின் இதயத்தில் அச்சத்தை விளைவிப்பவன்
* சாத்வதன் – சாத்வ குணத்தை விட்டு விலகாதவன்
* விருபாட்சணன் – வேதங்கள், அவனைக் காண்பதற்கான கண்கள் என்பதால் இப்பெயர் வந்தது.
* நாராயணன் – மனிதர்களின் புகலிடமாக இருப்பவன்
* புருசோத்தமன் – ஆண்களில் மேன்மையானவன்
* அனந்தன் – அழிவில்லாதவன்
* கோவிந்தன் – பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவன்
* பத்மநாபன் – தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்
* அச்சுதன் – எந்த ஒரு காரியத்திலும் இருந்து நழுவ நினைக்காதவர்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]