முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வன் யோசித்தவின் கணுக்காலில் ஏற்பட்டுள்ள சுகயீனத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள அவுஸ்திரேலியா செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
டிசம்பர் 10 முதல் 31 வரையான காலப்பகுதிக்குள் அவுஸ்திரேலியா செல்ல வேண்டியிருப்பதாக அவருடைய சட்டத்தரணி நீதவானிடம் கூறியிருந்தார். இதற்கமைய வழக்கு விசாரணைக்கு இடைநடுவே யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு சென்று வருவதற்கு கொழும்பு மேல் நீதி மன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
கார்ல்டன் விளையாட்டு வலையமைப்பில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் பணப்பரிமாற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.