வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ஸ்ரீபண்டாகரன் சினேகன் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்து பெற்றோருக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவன், யாழ். மாவட்டத்தில் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.
யாழ். இந்துக்கல்லூரி மாணவன்
யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கினை சேர்ந்த, இந்த மாணவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்.
இவர் கல்லூரியின் மேசைப்பந்து அணிவீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.