அனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த முதலை வீட்டு விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்த முதியவர் ஒருவரின் கட்டிலுக்குக் கீழ் மறைந்து இருந்துள்ளது.
சுமார் ஒன்பது அடி நீளமுள்ள குறித்த முதலை அருகிலிருந்த நீர் நிலையொன்றிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை நித்திரைவிட்டு எழுந்த முதியவர் கட்டிலுக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை இடிக்கும் உரலை எடுப்பதற்காக குனிந்தபோது குறித்த முதலை வாயைப் பிழந்தவண்ணம் இருப்பதை அவதானித்து பதறியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் வனவிலங்கு அதிகாரிகள் வந்து குறித்த முதலையை மீட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

