ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெளஹானியை கட்டார் நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பதற்றத்தை போக்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் என்னுடைய இந்த பயணம் அமைந்து இருக்கிறது. தற்போது ஈரானில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே ஒரே தீர்வாக அமையும் எனவும் கட்டார் அமீர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஈரானின் ஆன்மீக தலைவர் அயத்துல்லா அலி கொமேனியையும் கத்தார் இளவரசர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

