கொவிட்-19 தொற்று கவலைகள் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தூதரக கடமைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
எனவே சேவை பெறுநர்கள் அவசர சேவைகளுக்காக (+974) 77388977 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் தெரிவித்துள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]