கொழும்பு கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பாரிய பழைமைவாய்ந்த களஞ்சியசாலை ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது.
குறித்த கட்டிடம் திடீரென இடிந்து வீழ்ந்தது. இவ்வாறு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஸ்தலத்திலேயே பலர் மரணமானர்.
இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடநடியாக அங்கிருந்தவர்களாலும் ஸ்தளத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைக்கும், படையினர், மீட்புப் பணியினர், பொலிஸார் ஒன்றினைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த சம்பவத்தில் ஏழுபேர் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயப்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (14) பிற்பகல்; 3.10 மணியளவில் இந்தச் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை களஞ்சியம் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படும் கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது. கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.