Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சி தொடங்கி குறுககியகாலத்தில் ஆட்சியை கைப்பற்றும் முதல் சந்தர்ப்பம்

August 6, 2020
in News, Politics, World
0

ஒரு அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு குறுகிய காலத்திற்குள், நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றும் முதலாவது தேர்தலாக நேற்றைய தேர்தல் வரலாற்று ஏடுகளில் பதியப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்கள்கருத்துக்களை மதிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட கட்சியாகும். ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரும் அந்தக் கட்சி மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கும் என பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

கொரோனா நெருக்கடியை சமாளித்த விதத்தைப் போன்றே, நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கும் புதியஅரசாங்கத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட ஆட்சி நிர்வாகத்தின் கீழ் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீண்டெழச் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எதிர்பார்த்துள்ளோம். இலக்கு வெற்றிப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை அணுசரித்து தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலதரப்புகளுக்கும் மக்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலத்தில் நேற்று வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை பசில் வெளியிட்டார்.

Previous Post

மற்றைய வடக்கு மாவட்டங்களிலும் பார்க்க யாழில் குறைந்தது வாக்கு வீதம்

Next Post

வாக்கு எண்ணும் இடங்களில் எந்த ஆபத்தும் இல்லை ; ஜாலிய சேனாரத்ன

Next Post

வாக்கு எண்ணும் இடங்களில் எந்த ஆபத்தும் இல்லை ; ஜாலிய சேனாரத்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures