அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க சேர்ந்திருப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமைப்பாளர்கள் குழுவொன்றாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் விஜித் விஜேமுனி சொய்சா தலைமையில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க இணைந்துகொண்டனர். இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தயாசிறி எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

