Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

March 7, 2020
in News, Politics, World
0
கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ள  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

பண்டாரநாயக்கவினால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது வேறு ஒரு கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

“மக்களுக்காக பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அந்த கட்சி தற்போது மக்களின் கட்சியும் அல்ல. அந்த கட்சி வேறு ஒரு கட்சியின் வாலில் உள்ள முடியாக மாறியுள்ளது.

அரசியலில் தற்போது கல்வியாளர்களான தலைவர்கள் இல்லை. இது நாட்டின் கல்வி முறையில் இருந்து காணப்படும் பிரச்சினை.

இவை எவற்றுடனும் எனக்கு தொடர்பு இல்லை. நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு பெரிய திருப்தியடைந்து வருகிறேன்” எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Previous Post

பரிசோதனை மையமாகிறது மட்டு – தனியார் பல்கலைக்கழகம்

Next Post

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Next Post
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures