ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரத்து செய்வதற்கான காரணம், கட்சியிலுள்ள இன்னும் பல அமைப்புக்களுடன் தீர்க்கமாக கலந்துரையாடுவதற்காகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
இன்று (06) விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் நாளை (07) கட்சியின் தீர்மானத்தை அறிவிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை கட்சியுடன் உள்ள தொழிற்சங்கங்களுடனும் அறிவித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பு மனுவில் இன்று காலை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

