கட்சி என்ன தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பதை விடவும், கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளரும் என்பது தெளிவாகியுள்ளதாகவும் இதன்படி, கட்சியின் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்மானத்தை எடுக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரைத் தீர்மானிப்பதற்கு கருத்துக் கோரல் ஒன்றை நடாத்துமாறு கட்சித் தலைமையிடத்தில் கோரப்பட்டதாகவும் அதனை செவியேற்காது செயற்பட்டதனால், ரஞ்ஜித் மத்தும பண்டார எம்.பி.யினால் சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்கப்பட்டதாகவும், அதனை தான் வழிமொழிந்ததாகவும் ஹரீன் பெர்ணாந்து குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (16) சிறிக்கொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

