கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நாளை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற படைகல சேவிதர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற பாதுகாப்பு தொடர்பிலும் இன்று சபாநாயகருடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

