கடுமையான மழை, கடுங்காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், கடல் சீற்றம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.