காலி – ரத்கம கடலில் நீராடச் சென்ற நபரொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ரத்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹஜன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள கடலில் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற 26 வயதுடைய ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.