வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக உயர்திரு.தி.ஜோன் குயின்டஸ் அவர்கள் இன்று ( 02.01.2023 ) கடமையேற்றுக்கொண்டார்.
இவர் புனித பத்திரியார் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், அப் பாடசாலையின் பழைய மாணவனும், யாழ் பல்கலையின் பட்டதாரியும், தீவகம் மற்றும் கிளிநொச்சியின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளரும், மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளருமாவார்.