பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் லலித் ஷாந்தவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(15) ரோஹித ராஜபக்ஷ உடன் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோதே நிகழ்ந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் குறித்த இடத்தில் இருந்துள்ளார்.
இதற்கு முன்னர் நிதி குற்ற விசாரணை பிரிவினால் தன்னிடம் விசாரணை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக குறித்த உப பொலிஸ் பரிசோதகர் மீது நாமல் குற்றம் சுமத்தி தாக்கல் செய்த வழக்கு குறித்த முறுகளிலேயே நாமல் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இதுகுறித்து குறித்த பொலிஸ் அதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளதாகவும் அது குறித்த விசாரணைகள் எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.