பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரானின் பூம்பா எனும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளையில் வைத்து பொலிஸ் அதிரடி படையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் கஞ்சிபான இம்ரானின் பிரதான உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மேலுமொரு உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

