கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறையும் சிங்கள மொழியில் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.
கச்சதீவு திருவிழாவில் முதல் தடவையாக சிங்களத்தில் காலி மறை மாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை திருப்பலி ஆராதனைகளை நிகழ்த்தவுள்ளார்.
கச்சதீவு திருவிழாவில் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் ஆராதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இம்முறை திருவிழாவிற்கு இந்தியாவில் இருந்து 5000 பேரும், இலங்கையில் இருந்து 8000 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இரண்டு நாட்கள் தங்குவதற்கான வசதிகளையும், உணவு வசதிகளையும் இலங்கை கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர்.