Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கச்சதீவில் புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் | திருமாவளவன்

March 31, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கச்சதீவில் புத்தர்சிலையை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுங்கள் | திருமாவளவன்

கச்சதீவில் புத்தர்சிலையொன்று நிறுவப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் இந்திய மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், அந்த புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் கச்சதீவில் புத்தர்சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயம் இலங்கை மற்றும் இந்தியவாழ் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், கச்சதீவில் பாதுகாப்புப்பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள கடற்படை இணைப்பில் பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானோர் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் மதவழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒரு சிறிய புத்தர்சிலை கடற்படையினரின் இல்லத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருப்பதாகக் கடற்படை விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கச்சதீவில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மக்களவையில் விவாதிப்பதற்கு மக்களை உறுப்பினர் தொல்.திருமாவளவன் மக்களவையின் செயலாளர் நாயகத்திடம் கடிதம் மூலம் அனுமதிகோரியுள்ளார்.

‘சிங்கள இனவாதிகள் மதரீதியான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் நோக்கில் கச்சதீவில் புத்தர்சிலையொன்றை நிறுவியுள்ளனர். அங்கு புனித அந்தோனியார் தேவாலயம் மாத்திரமே இருப்பதுடன், வருடாந்தத் திருவிழாவும் இடம்பெற்று வருகின்றது. எதுஎவ்வாறெனினும் அங்குள்ள கிறிஸ்தவர்களை விரட்டும் நோக்கில் சிங்கள இனவாதிகள் அப்பகுதியில் பெரியதொரு புத்தர்சிலையை நிறுவியுள்ளனர். இந்நடவடிக்கை தமிழ்நாட்டிலும், தமிழீழத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிரானது மாத்திரமல்ல. மாறாக இது அவர்களின் மதரீதியான உரிமைகளுக்கும் எதிரானதாகும்’ என்று அக்கடிதத்தில் தொல்.திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இச்செயலைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையை அகற்றுவதற்கும் அப்பகுதியில் மதரீதியான ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.  

Previous Post

வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

Next Post

‘புன்னைக்குடா வீதி’யின் பெயர்மாற்ற விவகாரம் | ஏறாவூர் பள்ளிவாசல் சாணக்கியனுக்கு கடிதம்

Next Post
காபுலில் போல இலங்கையிலும் மக்கள் நாட்டை ஓடும் நிலை உருவாகும்:  சாணக்கியன்

'புன்னைக்குடா வீதி'யின் பெயர்மாற்ற விவகாரம் | ஏறாவூர் பள்ளிவாசல் சாணக்கியனுக்கு கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures