இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார் என்றும் உறுதிபடுத்தப்பட்ட வாட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 2008 நவம்பர் 27 சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான மெத்தியூஸ் இறுதியாக கடந்த மார்ச் 09 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்.
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,219 ஓட்டங்களையும் 191 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் மெத்யூஸ்.
இலங்கை கிரிக்கெட் தற்போதுள்ள நிலையில் மெத்யூஸ் போன்ற அனுபவமுள்ள வீரர் ஓய்வு பெறுவது என்பது, அணியை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விடக்கூடும்.