எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழுவின் 3 உறுப்பினர்களும் இன்று கூடியிருந்தனர்.
இதன்போது 2020 பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5ஆம் திகதி நடத்த மூன்று உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானித்ததாக மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
பொதுத் தேர்தலை ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வேட்பாளர்களின் விருப்ப எண் வர்த்தமானி மூலம் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் பரப்புரைகளை ஆரம்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

