Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்

November 12, 2017
in Sports
0
ஒவ்வொரு கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம்

இந்திய அணிக்கு 2 உலகக் கோப்பைகளைப் பெற்றுத் தந்த கேப்டன், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கெதிரான ஒருநாள் தொடர் வெற்றி என சக்சஸ்ஃபுல் கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து, லிமிடெட் ஓவர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டனாக மட்டுமே செயல்பட்டு வந்த தோனி, அந்த பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், அணியில் ஒரு வீரராக தோனி தொடர்ந்து இடம்பெற்று வந்தார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்தது முதலே, அவரது ஓய்வு குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. சமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் தோனியின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் அவர் மெதுவாக ரன் சேர்த்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு தோனி வழிவிட வேண்டும் என்று வி.வி.எஸ். லட்சுமணன், அஜித் அகார்கர் போன்ற முன்னாள் வீரர்களே தோனியை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கினார். இந்த விமர்சனங்களுக்கு விராட் கோலி, நெஹ்ரா, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்தநிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து தோனி முதல்முறையாக மனம் திறந்துள்ளார். துபாயில், தனது கிரிக்கெட் அகாடெமியைத் திறந்துவைத்த தோனியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தோனி ‘வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அதை நிச்சயம் மதிக்க வேண்டும். வாழ்வைக் கற்றுக்கொள்ளும் ஒரு வழியே விளையாட்டு. ஒவ்வொரு வெற்றி மற்றும் தோல்விக்குப் பின்னரும் மக்களை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது முக்கியம். அதேபோலவே, உங்கள் மீதான விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். திறந்த மனதுடன் அவற்றை எடுத்துக் கொண்டு உங்களை, நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமான விஷயம்.

இந்திய அணியில் விளையாடுவது மிகப்பெரிய உத்வேகம் அளிக்கக் கூடியது. நமது வாழ்நாளில் ஒரு ஆண்டு முதல் 15 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக விளையாடுவோம். சிலர் 20 ஆண்டுகள் கூட விளையாடுவதுண்டு. குறைந்தபட்சம் 70 ஆண்டுகள் வாழும் நிலையில், இந்த 10-15 ஆண்டுகள் என்பது மிகச்சாதாரணமானது. முடிவுகளைப் பற்றி நான் எப்பொழுதுமே சிந்திப்பதில்லை. அந்த கணத்தில் தேவையானது எதுவே, அதை மட்டுமே நான் செய்வேன்’ என்றார்.

Previous Post

ஆஸி.யில் வெற்றி பெறத் தேவையான நுட்பம், வேகம் இங்கிலாந்து பவுலிங்கில் இல்லை

Next Post

சிம்புவை மிரட்டியது யார்? – சிம்பு விளக்கம்

Next Post

சிம்புவை மிரட்டியது யார்? - சிம்பு விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures