கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் ஈஃபிள் கோபுரம் முன்று தடவைகள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்த மே 22 ஆம் திகதி மற்றும் 29 ஆம் திகதிகளில் இரண்டு தடவைகள் ஈஃபிள் கோபுரம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது நீங்கள் அறிந்ததே. இந்நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பரிஸ் கடும் இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்திருந்தது. இதன்போது அன்றைய இரவில் மட்டும் மூன்று முறைகள் ஈஃபிள் கோபுரம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த மின்னல் தாக்குதல்களை பிரெஞ்சு வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் Bernard Kulik புகைப்படங்களாக எடுத்திருந்தார். மின்னல் தாக்குதல்களால் ஈஃபிள் கோபுரத்தை பார்வையிடும் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், ஈஃபிள் கோபுரத்துக்கு கூட சேதம் ஏற்படாது எனவும் SETE தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதேவேளை, கடந்த மே மாதத்தில் பிரான்சில் 1,83,000 மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது என்பதும், பரிசுக்குள் மின்னல் தாக்குதல்களால் பல்வேறு சேதங்களும் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.