Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

July 24, 2021
in News, மகளீர் பக்கம்
0
ஒரு வினாடி சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளுக்கு காரணம்

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன.

கவனச்சிதறல் என்பது, எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் விஷயம். அது, செய்து கொண்டிருக்கும் செயல்களில் சிக்கலை ஏற்படுத்திவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டிருக்கும்போது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டியது முக்கியம். அப்படி முழு கவனத்தையும் செலுத்தி செய்துமுடிக்கும் காரியம்தான் நிறைவினைத் தரும். கவனச் சிதறலோடு செய்யப்படும் எந்த காரியமும் முழுமையான பலனைத்தராது. அதில் திருப்தியும் ஏற்படாது.

நாம் என்ன செய்கிறோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதில் எப்போதும் கவனம் தேவை. அப்படி கவனம் செலுத்துவது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வசப்பட்டு விடாது. கவனத்தை சிதறவிடாமல் ஒன்றின் மீது முழு கவனத்தையும் குவிப்பதற்கு படிப்படியாக பயிற்சி செய்ய வேண்டும். கார் ஓட்டுவதாக வைத்துக்கொண்டால் முழு கவனமும் சாலை மீதும், கார் மீதும் பதிய வேண்டும். அப்போது கவனம் சிதறினால், விபத்து ஏற்பட்டு விடும். கண நேர கவனச் சிதறல்களே மிகப்பெரிய ஆபத்துகளை உருவாக்குகின்றன.

செய்யும் காரியம் எதுவாக இருந்தாலும் அதில் கவனத்தை ஒருங்கிணைக்க பழகிக் கொள்ளுங்கள். அதிகம் பேசுபவர்களும் கவனச்சிதறலுக்கு ஆளாகலாம். முக்கியமான வேலையில் ஈடுபடும்போது தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குறைத்துக்கொள்வது நல்லது. கவனம் என்பது நம் அறிவின் ஆற்றல். இதனை தியானத்தின் மூலம் பெறலாம். கண்களை மூடி அமைதியாக தியானம் செய்வதற்கு பழகுவதன் மூலம் கவனத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கலாம். கண்கள் திறந்திருந்தாலும் அதேபோன்ற கவன ஒருங்கிணைப்புக்கு மனம் பழக்கப்பட்டுவிடும்.

மூளையின் கட்டளைப்படிதான் நம் செயல்கள் அமையும். நாம் ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது இடையில் மூளை வேறு எதையோ சிந்திக்க அனுமதித்தால் அந்த வேலையில் தடுமாற்றம் ஏற்படும். அதனால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவு இருக்கும் என்பது வேலையின் முக்கியத்துவத்தை பொறுத்தது. விமான ஓட்டிக்கு கவனச்சிதறல் ஏற்படுமானால் பயணிகளின் உயிருக்கு பங்கம் நேர்ந்துவிடும். ஒரு கணம் சிதறும் கவனம் ஓராயிரம் பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

கவனம் என்பது செய்யும் செயல்கள் மீது நமக்குள்ள ஈடுபாடு, பொறுப்பு, ஆர்வம், இதையெல்லாம் உள்ளடக்கியது. மன உளைச்சல், குழப்பம், செயலில் உள்ள வெறுப்பு, உடல் சோர்வு போன்ற பல விஷயங்கள் கவனச் சிதறலுக்கு காரணமாக இருக்கின்றன. மனித வாழ்க்கையில் இதெல்லாம் இயல்பான உணர்வுகள்தான். ஆனால் நாம் செய்யும் செயல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். முக்கியத்துவத்தை உணர்ந்தால் மூளை முழு கவனத்தைக்காட்டும். வேலையை ஆரம்பிக்கும்போது முழு கவனத்தையும் அதன் மீது செலுத்தினால், மூளையும் அதற்குதக்கபடி ஒத்துழைக்கும்.

சிறுவயதில் ஏற்படும் விபரீதமான நிகழ்வுகள்கூட கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. சிறு வயதில் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மனதை வெகுவாக பாதித்து விட்டால் அந்த நினைவுகள் திரும்பத்திரும்ப நினைவில் வந்துகொண்டே இருக்கும். அப்போது மனம் தன்னை மறந்து விடும். பழைய நினைவுகளில் மூழ்கி விடும். இதுபோன்ற கவனச் சிதறல்களை சரி செய்வது கொஞ்சம் சிரமம். ஒரே மனிதன் இருவேறு நினைவுகளில் வாழ்வது விபரீதமானது. இது போன்ற மனநிலையை மனச்சிதைவு என்று குறிப்பிடு கிறார்கள். அதற்கு மனோரீதியான மருத்துவம் தான் சரியான தீர்வாக அமையும்.

மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் கசப்பான எண்ணங்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். ‘ஹிப்னாடிசம்’ என்னும் ஆழ்ந்த மயக்க நிலைக்கு அவரை கொண்டுசென்று ஆழ் மனதை வருடும் அன்பான வார்த்தைகளை பேசும் போது மனதில் புதைந்திருக்கும் பழைய பதிவுகள் வெளிப்படும். அதே நிலையில் பேசி உண்மைகளை எடுத்துச் சொல்லி மனதை தெளிவு படுத்த வேண்டும். பழைய நினைவுகளை அப்புறப்படுத்திவிட்டு இன்றைய வாழ்க்கைக்கு மூளையை திசை திருப்பவேண்டும். இல்லை என்றால் இன்றைய வாழ்க்கை சிக்கலாகிவிடும். இந்த அற்புதத்தை ஆழ்மனதின் மூலம்தான் நிகழ்த்தவேண்டும்.

கவனம் என்பது இறந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் சம்பந்தம் இல்லாதது. நிகழ்காலத்திற்கு மட்டுமே அது சாத்தியமானது. இப்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, அதை 100 சதவீத வெற்றிக்கு சாத்தியப்படுத்தவேண்டும். முழு கவனத்தோடு செய்யும் காரியங்களால் ஆபத்துகள் தவிர்க்கப்படும். கவனம் என்பது நம் வாழ்க்கைக்கு மிக தேவையான ஒன்று என்பதை உணர்ந்து எடுத்த காரியத்தை கவனச்சிதறல் இல்லாமல் செய்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக மூளைக்கு கொடுத்து கவனத்தை வசப்படுத்திக்கொள்ள வேண்டும். கவனத்தோடு செய்யும் செயல்கள்தான் அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

Next Post

முகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்

Next Post
முகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்

முகப்பொலிவை மேம்படுத்த இயற்கை கூறும் வழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures