தபால் மா அதிபர் பதவி இடைவெளியாகி ஒரு மாதமாகியும் இதுவரையில் அப்பதவிக்கு தகுதியான ஒருவரை அரசாங்கம் நியமிக்காமையினால் தபால் திணைக்களம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டு தபால் சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
முன்னாள் தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன கடந்த ஜூன் 25 ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதிலிருந்து இப்பதவி இடைவெளியாக காணப்படுவதாக அவ்வொன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் மா அதிபரின் பதவி இடைவெளியாக காணப்படுவதனால், தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

