நடிகை கஸ்தூரி தொடர்பான கேள்விக்கு ஒன்றுக்குப் பதில் அளித்துள்ள தமிழ்நாட்டு ஊடகவியலாளர் பாண்டியன் நடிகை கஸ்தூரியை தரக்குறைவான வார்த்தைகள் மூலம் அநாகரிகமாக பேசியமை வன்மையாக கண்டிக்க வேண்டியதாகும்.
அரசியலுக்கு வரும் பெண்களை, சமூகப் பிரச்சினைகள் குறித்து கவனம் எழுப்பும் பெண்களை இப்படி அநாகரிக வார்த்தைகளால் பேசி திசை திருப்ப முயல்வது அநாகரிகம் மட்டுமல்ல, குறுக்குப் புத்தியும்தான்.
கஸ்தூரியை அரசியலுக்கு வர வேண்டாம் என்று சொல்ல இவர் யார்? ஜெயலலிதாவின் முன் இப்பிடி பேசுவாரா? சினிமாத்துறையில் இருந்து மாத்திரமில்ல, எந்தத் துறையில் இருந்தும் எவரும் அரசியலுக்கு வரலாம். அது ஜனநாயகம்.
சினிமா துறையில் இருந்துதான் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி எல்லோருமே அரசியலுக்கு வந்தவர்கள். கஸ்தூரியை மாத்திரம் இவர் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் பேசக்கூடாது என்று சொல்ல இவருக்கு யார் அதிகாரமளித்தது?
அண்மையில்கூட மே மாதம் ஒரு கலை நிகழ்வு தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்டது. அதில் கஸ்தூரியும் கலந்துகொள்வதாக இருந்தது. இதில் கலந்தகொள்ளதீர்கள், இது இனப்படுகொலை நினைவேந்தல் மாதம் என்றேன். உடன் கஸ்தூரி அதில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றார். நிகழ்ச்சி உடன் நிறுத்தபட்டது.
இப்படியாக ஈழத் தமிழ் மக்களின் பக்கம் கஸ்தூரி நிற்கின்றார். எனவே, இத்தகைய காழ்ப்புணர்ச்சிகளையும் இயலாமைப் பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல் நடிகை கஸ்தூரியின் அரசியல் பயணம் வெற்றி பெற என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். என்னைப் போன்ற உலகத் தமிழர்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் கஸ்தூரி.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை