ஒமிக்ரோன் திரிபு காரணமாக கிறிஸ்துமஸ் காலப் பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் பயண மற்றும் கொவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் மீண்டும் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது, மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கல் நிலையில் உள்ளது.
ஏனைய கொவிட் வகைகளை விட ஒமிக்ரோனின் தாக்கம் இலகுவானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் தெரிவித்திருந்த போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதனால் சுகாதார அமைச்சினர் கவலையில் உள்ளனர்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை அதிகரித்தன.
இதேவேளை அமெரிக்காவில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை முழுமை நிலையை எட்டியுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]