கடந்த ஒன்பது வருடங்களில் முதன்முறையாக லெபனானில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது.
சிரியாவில் போர் நடப்பதாலும், நாட்டின் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களுக்காவும் கடைசியாக இருந்த பாராளுமன்றம் இரண்டு முறை தனது பதவியை நீட்டித்துக்கொண்டது.
வாக்குப்பதிவானது 50 சதவீதத்துக்கும் சற்று குறைவாக நடந்தாக உள்துறை அமைச்சர் நோகாட் எய் மச்நூக் அறிவித்துள்ளார்.
இது கடந்த முறையை விட சற்றே குறைவாகும்.
ஷியா முஸ்லீம் உட்பட பாரம்பரிய காட்சிகள் , ஹெஸ்பொல்லா இயக்கத்துடன் ஆட்சி பகிர்வு ஏற்பாட்டினை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமைக்குள் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.