முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதில் பயணித்த இருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் தப்பி ஓடிய ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிய முடிகிறது
குறித்த சம்பவம் இன்று காலை ஆறுமணியளவில் வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இச் கிளைமோர் மீட்டப்பட்டுள்ளது
இருப்பினும் மேலதிக தகவல்கள் எதனையும் ஒட்டிசுட்டான் காவல்துறையினரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை நிலையைப் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவிய பொழுது விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது எனவும் தகவல்களை காவல்துறை ஊடகப்பிரிவிடம் எடுக்குமாறும் தெரிவித்தார்
மேலும், தப்பி ஓடியவர்களை பிடிக்க விசேட அதிரடிப்படை ஒரு குழுவை அமைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு, கிளிநொச்சி காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

