உக்ரைனுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதிலிருந்து இலங்கை விலகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் மற்றும் அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபை வாக்களித்தது.
மொத்தம் 141 ஐ.நா. உறுப்பு நாடுகள் தீர்மானத் துக்கு ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிக்க வில்லை. ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதிலிருந்து விலகிய 34 நாடுகளில் இந்தியாவுடன் இலங்கையும் அடங்கும்.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கள் “ஐரோப்பாவில் பல தசாப்தங்களாக சர்வதேச சமூகம் கண்டிராத அளவில் உள்ளன. மேலும் இந்தத் தலைமுறையை போர் கசப்பிலிருந்து காப்பாற்ற அவசர நடவடிக்கை தேவை” என்று தீர்மானம் கூறுகிறது.
அது “உடனடியாக அமைதியான முறையில் மோதலைத் தீர்க்க வலியுறுத்துகிறது.” மேலும் “சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான” பேரவையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]