சிவில் அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி இணைந்து மேற்கொண்ட
ஜனநாயகப் பாதுகாப்பதற்கான கருப்பொருளில், விஹாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு தொடர்ந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
நவம்பர் 9 ம் திகதி நாடாளுமன்றத்தின் கலைப்பு சட்ட விரோதமானது என்று தொடங்கப்பட்ட போராட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முடிவைத் தொடர்ந்து முடிவடைந்ததாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்தன.
இந்நிகழ்வில் சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனரத்ன உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

