பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பத்தியுத்தீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே அந்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய இரு கட்சிகளுக்கும் இரு உறுப்பினர்கள் வழங்கப்படும் போது அரசாங்க தரப்புக்கு பெரும்பான்மை பெறக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தெரிவுக் குழுவில் பெரும்பான்மை பலத்தை பெறும் விதமாக உறுப்பினர்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், இல்லாவிடின் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க தரப்பு எம்.பி.க்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

