புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் புஸ்வாணமாகியது. “நீதிக்கான மக்கள் குரல்” என்ற தொனிப்பொருளில் ஐ. தே. க. நேற்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் அந்த ஆர்ப்பாட்டம் முற்றாக தோல்வி கண்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் அரசியலமைப்புக்கிணங்க புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு 50 ஆயிரம் மக்களை திரட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தபோதும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரத்திற்கும் குறைவானோரே பங்குபற்றியிருந்ததைக் காணமுடிந்தது.
62 இலட்சம் மக்களின் ஆதரவு தமக்குள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினால்
தெரிவிக்கப்பட்டாலும் மிகக் குறைந்தளவு மக்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வெறும் புஸ்வானமாகியது.