ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவம் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று சிறிக்கொத்த தலைமையகத்தில் இடம்பெறவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் தலைமைத்துவத்தை வழங்க, தலைமைத்துவ சபையொன்றை அமைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், இன்று மாலை நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு சகலரையும் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

