நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகமே இவ்வாறு தாக்குதலுக்குள்ளானது.
ஐ.தே.க. வேட்பாளரான ரைட்டஸ் பெரேராவின் அலுவலகமே இன்றுகாலை தாக்கப்பட்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் (CMEV) தெரிவித்திருக்கின்றது. இதன்போது அலுவலகத்தில் இருந்தவர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாக குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இத்தாக்குதலில் அலுவலகம் பலத்த சேதமடைந்ததுடன், அங்கிருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.