சட்டம் ஒழுங்கு அமைச்சை லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு வழங்க தான் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அதனை தான் முற்றாகப் புறக்கணிப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது, இவ்வமைச்சுப் பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும், அரசாங்கத்தின் பங்காளியாக இருந்தும் அந்தப் பதவி அவருக்கு கிடைக்காமல் போனது.
இருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் அனுபவமுள்ள சிறந்த தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவி கிடைக்கப் பெற்றமையையிட்டு தான் மகிழ்ச்சியடைகின்றே எனவும் அவர் கூறியுள்ளார்.