ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 பேரின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த தகவல்களை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கான கடிதங்கள் இன்றைய தினம் அஞ்சலிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ள 115 பேரின் விபரங்கள் நேற்று ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்த முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற 54 பேரும் அந்த கட்சிக்கு ஆதரவு வழங்கிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 61 பேரும் அடங்கியுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அஜித் பி பெரேரா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, சுஜீவ சேனசிங்க மற்றும் ஜெயானந்த சிங் கோகிலநாத் சிங், எம்.என்.ஹூசேன் கியாஸ், எஸ்.எச்.எம்.அன்சார் ஆகியோர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.