Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐ.தே.கவுக்கும் மக்கள் முன்னணி ஆதரவு !!

March 31, 2018
in News, Politics
0

ஈ.பி.டி.பியு­டன் இணைந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­ வேட்­பா­ளரைத் திருக்­கோ­வில் பிர­தேச சபை­யில் ஆத­ரித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, பொத்­து­வில் பிர­தேச சபை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி வேட்­பா­ளரை ஆத­ரித்து அவ­ரைத் தவி­சா­ள­ராக்­கி­யது.

அம்­பாறை மாவட்­டத்­தின் பொத்­து­வில் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் பிர­தித் தவி­சா­ளர்­களை தெரிவு செய்­யும் முத­லா­வது அமர்வு நேற்­று­முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 6 உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 5 உறுப்­பி­னர்­க­ளும், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்­சி­யின் 4 உறுப்­பி­னர்­க­ளும், தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 3 உறுப்­பி­னர்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சுயேச்­சைக் குழு, மக்­கள் விடு­தலை முன்­னணி சார்­பில் தலா ஒரு­வ­ரு­மாக மொத்­த­மாக பொத்­து­வில் பிர­தேச சபைக்கு புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட 21 உறுப்­பி­னர்­க­ளில் 20 உறுப்­பி­னர்­கள் தவி­சா­ளர் தெரி­வில் கலந்து கொண்­ட­னர்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யின் உறுப்­பி­னர் எம்.எஸ்.அப்­துல் வாஸித் மற்­றும் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கட்சி உறுப்­பி­னர் ஏ.சதக்­கத்­துல்­லாஹ் ஆகி­யோ­ரின் பெயர்­கள் தவி­சா­ளர் பத­விக்கு பிரே­ரிக்­கப்­பட்­டன.
பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. ஐக்­கிய தேசி­யக் கட்சி முன்­மொ­ழிந்த வாஸித்­துக்கு 10 வாக்­கு­க­ளும், மக்­கள் காங்­கி­ரஸ் முன்­மொ­ழிந்த சதக்­கத்­துல்­லா­விற்கு 8 வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சுயேச்­சைக் குழு என்­பன ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கின. மக்­கள் விடு­தலை முன்­னணி உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் அங்­கம் பெறும் தேசிய காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் நடு­நிலை வகிப்­ப­தாக அறி­வித்­த­னர். எம்.எஸ்.அப்­துல் வாஸித் தவி­சா­ள­ராக தெரி­வா­னார்.

அத­னைத் தொடர்ந்து புதிய தவி­சா­ள­ரின் தலை­மை­யில் பிர­தித் தவி­சா­ளர் தெரிவு இடம்­பெற்­றது. பிர­தித் தவி­சா­ளர் பத­விக்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பாக ஏ.எம்.அப்­துல் மஜீத் மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பாக பெரு­மாள் பார்த்­தி­பன் ஆகி­யோ­ரது பெயர்­கள் முன்­மொ­ழி­யப்­பட்­டன. பார்த்­தி­பன் 10 வாக்­கு­க­ளை­யும், அப்­துல் மஜீத் 9 வாக்­கு­க­ளை­யும் பெற்­ற­னர். இதன் கார­ண­மாக அதிக வாக்­கு­களை பெற்ற பார்த்­தி­பன் பிர­தித் தவி­சா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­டார்.

Previous Post

எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்!

Next Post

சொந்த நல­ன்களுக்­கா­கவே சம்­பந்­தன் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக உள்­ளார்!!

Next Post

சொந்த நல­ன்களுக்­கா­கவே சம்­பந்­தன் எதிர்க் கட்­சித் தலை­வ­ராக உள்­ளார்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures