Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகள் தடுத்து நிறுத்தம்!

November 20, 2017
in News, Politics, World
0

மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வறுமை நிலையில் வாடும் மக்களில் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர்.

மேலும், உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் இந்த அகதிகள், ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மெடிட்டேரியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற அகதிகளை அல்ஜீரியா கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.

இதுதொடர்பாக அல்ஜீரியாவின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை மெடிட்டேரியன் கடலில் சோதனையில் ஈடுபட்டோம். அப்போது ஆவணங்கள் இன்றி ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 பேரை மடக்கிப் பிடித்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

Previous Post

இந்த ஒரே ஒரு பதிலால்தான் உலக அழகி பட்டம்

Next Post

கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

Next Post

கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures