Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்த நட்சத்திர வீரர் இவர் தான்!

September 6, 2016
in News, Sports
0
ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்த நட்சத்திர வீரர் இவர் தான்!

ஐசிசி தரவரிசை: முதலிடம் பிடித்த நட்சத்திர வீரர் இவர் தான்!

ஐசிசி ஒருநாள் போட்டி துடுப்பாட்டத் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மா ஒரு இடம் சரிந்து 7-வது இடம் சென்றுள்ளார்.

தொடக்க வீரர் ஷிகர் தவன் 8-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் முதல் முறையாக துடுப்பாட்டத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து 4-வது இடத்திற்கு தாவியுள்ளார்.

ஜோ ரூட் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் 274 ஓட்டங்களை விளாசினார். இதனால் கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 4-வது நிலைக்குச் சென்றுள்ளார்.

அதிரடி தொடக்க இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் 4 இடங்கள் முன்னேறி 20-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 171 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்ததையடுத்து அவருக்கு இந்த தரவரிசை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் 10 இடங்கள் முன்னேறி 35-வது இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை தரவரிசையில் அணியாக அடிமட்டத்திற்குச் சென்றாலும் விக்கெட் தடுப்பாளர் சர்பராஸ் அகமட் தனது 55, 105, 38, 12, 90 ஆகிய ஓட்டங்களினால் 21 இடங்கள் முன்னேறி 39-வது இடத்திற்கு வந்துள்ளார்.

அதே போல் இலங்கையுடன் மோதிய அவுஸ்திரேலிய அணி தொடரை 4-1 என்று கைப்பற்றியதில் பங்களித்த ஆரோன் பிஞ்ச் 15-வது இடத்திற்கும் ஜார்ஜ் பெய்லி 17-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். பெய்லி இந்தத் தொடரில் 270 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

தென் ஆப்பிரிக்க நட்சத்திர வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். விராட் கோஹ்லி 2-ம் இடத்திலும் ஹஷிம் ஆம்லா 3-ம் இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் பாக்னர், ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்ற்றம் அடைந்துள்ளனர்.

சுனில் நரைன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 2-ம் இடத்தில் டிரெண்ட் போல்ட் உள்ளார்.

அணிகளில் அவுஸ்திரேலியா முதலிடத்திலும் நியூஸிலாந்து 2-ம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் இருக்கின்றன. பாகிஸ்தான் 9-ம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கும் கீழ் உள்ளது பாகிஸ்தான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous Post

ஒரே பந்தில் 6 பேர் அவுட்..! ஷேவாக்கின் அதிரடி

Next Post

ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது?

Next Post
ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது?

ஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures