ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இந்த மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன்போதே ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

