தமக்கு நடந்த நம்பிக்கை மோசடிகளை பார்க்கின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனியும் இணைந்து பயணிப்பது என்பது மிகவும் கடினமான விடயம்.
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சியின் சார்பாக தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;
முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்டிய சபைகளில், தம்மை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணயிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றவுள்ளது.
இதற்காண இறுதி முடிவுகள் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கட்சித் தலைவருடன் இடம்பெற்றது.
அதன் இறுதி முடிவுகள் இன்னும் ஓரிரு தினங்களில் எடுக்கப்படும்.