நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் அந்த படத்தில் ஹீரோயினாக திஷா பாட்னி நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்தபிறகு சுதா கொங்கரா உடன் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் உடன் வாடிவாசல் படம் ஆகியவற்றில் சூர்யா நடிக்க இருக்கிறார்.
சூர்யா மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில் சமீபத்தில் அகரம் அறக்கட்டளை விழாவில் பங்கேற்க சூர்யா சென்னை வந்து இருந்தார்
இந்நிலையில் மும்பை ஏர்போர்ட்டுக்கு சூர்யா மகனுடன் வந்து இருக்கிறார். அப்போது பத்ரிக்கையாளர்கள் அவரை போட்டோ எடுக்க வந்த போது சூர்யா ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.
மகனை போட்டோ எடுக்காதீங்க என சூர்யா கேட்க, போட்டோகிராபர்களும் சரி என கூறி சூர்யாவை மட்டும் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.