கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட 11 முக்கிய நபர்களிடம் வாக்கு மூலம் பெற சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று இடம்பெற்ற பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் பிரியந்த லியனகே முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

