தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான லெஜன்ட் சரவணன் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும்’ லீடர் ‘ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வெளியாகும் என படக் குழு பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ஆர் .எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ எனும் திரைப்படத்தில் லெஜன்ட் சரவணன், பாயல் ராஜ் புத், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ் , ஆண்ட்ரியா , லால் , ஆதித்யா கதிர், பிரபாகர் , சந்தோஷ் பிரதாப், ஷாம், ‘ மகாநதி’ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லெஜன்ட் சரவணன் தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருவதுடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருந்தது.
இந்த திரைப்படம் எதிர்பார்க்கும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது திடீரென்று இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வெளியாகும் என பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட திகதிக்கு முன்னரே படம் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
